ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றது.

வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவும், வீடுகளில் செல்வம் பெருகவும் ஆண்டுதோறும் ஆடிமாதம் இந்த பூஜை நடத்தப்படுகிறது.

நிறை புத்தரிசி பூஜை 7ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. புதன்கிழமை அதிகாலை பூஜையும், மாலையில் புஷ்பாபிஷேகமும் நடைபெற்றபின் இரவில் நடை சாத்தப்படும்.

ஆவணி மாத பூஜைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் நடை திறக்கப்படுமென தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்