உயர்தர பரீட்சை எழுதிய இராஜாங்க அமைச்சர்

பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(திங்கட்கிழமை) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்