
அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 இலட்சம் ரூபாய் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே இந்த உத்தரவை சரத் குமார குணரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் ஆறு பேருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.