பூமியை கடக்கவுள்ள மிகப்பெரிய விண்கல்

மிகப்பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

விண்வெளியில் பில்லியன் கணக்கில் விண்கற்கள் உள்ளன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை.

எனினும், மிகப்பெரிய விண்கற்கள் பூமியை கடக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவுள்ளது.

தற்போது பூமியில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் குறித்த விண்கல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமிக்கு மிக அருகே கடந்து செல்லும் விண்கற்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விண்கற்கள் தொடர்பாக கண்டுபிடித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம் நாசாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor