
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 7947 குடும்பங்களைச் சேர்ந்த 27564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
அதனடிப்படையில் கரைச்சியில் 3001 குடும்பங்களைச் சேர்ந்த 10454 பேரும் கண்டாவளையில் 757 குடும்பங்களைச் சேர்ந்த3009 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பூநகரியில் 3693 குடும்பங்களைச் சேர்ந்த 12629 பேரும் பச்சிலைப்பள்ளியில் 496 குடும்பங்களைச் சேர்ந்த 1472 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வறட்சியினால் நீர்நிலைகளின் நீர்மட்டம் விரைவாக குறைவடைந்துள்ளதாகவும் மக்கள் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறு வறட்சியுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் மோசமான நிலை ஏற்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.