இன்று கொலர்சிப் , நாளை ஏ.எல்.

2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது

இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினார்கள்.

இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55,529 மாணவர்களும், தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றினார்கள்.

இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை

இதேவேளை நாளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 31 அம் திகதி வரை இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்