இலங்கையில் மீண்டும் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை.

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகவே இதன் காரணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்