களுத்துறையில் பேருந்துக்கள் விபத்து – அறுவர் பலி – 52 பேர் படுகாயம்

காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை தனியார் – அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3ஆண்கள், 3பெண்களாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 43ஆண்கள், 8பெண்கள், ஒரு குழந்தை என 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இ.போ.ச பேருந்து, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்