வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்