
மிஹிந்தலை – குருந்தல்கமை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் வீடு நிர்மாணப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஒருவருக்குமிடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் அதிகமானதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குருந்தல்கமை போதிராஜபுர பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
மேலும் சந்தேகநபர் குறித்த இடத்திலிருந்து தப்பிசென்றதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.