நல்லூரில் சோதனை கூடங்கள்

நல்லூர் ஆலயத் திருவிழாவின்போது ஆலயத்திற்கு வரும் பக்தர்களை சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொலிசாரின் கோரிக்கைக்கு அமைவாக அதற்கான சோதனைக் கூடங்களை யாழ்ப்பாணம் மாநகரசபை அமைத்து வழங்கியுள்ளது.
நல்லூர் ஆலயத்தின் வருடாத்த உற்சவம் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படுவர் என பொலிசார் தொடர்ந்தும் வலியுறுத்திவரும் நிலையில் குறித்த சோதனை நடவடிக்கைக்காக சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைக் கூடங்கள் மாநகர சபையில் நேற்றைய தினம் பணி நிறைவு செய்யப்பட்டதனை மாநகர முதல்வர் , ஆணையாளர் ஆகியோர் குறித்த சோதனை கூடங்களை பார்வையிட்டனர். ஆலயத்திற்கான 4 நுழைவாயிலிலும் தலா இரு சோதனைக கூடங்கள் வீதம் அமைக்கப்படவுள்ளது.
குறித்த சோதனைக் கூடங்களை அமைப்பதற்காக மாநகர சபைக்கு 3  லட்சம் ரூபா வரையில் செலவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்