சிலருக்கான நியமனம் வழங்கப்படவில்லை – விசாரணைகள் நடைபெறுகின்றன.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிற்கும் ஆயிரத்து 862   பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தினம் ஆயிரத்து 477 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டது.
வடக்கின் ஐந்து மாவட்டத்திற்குமான பெயர்ப் பட்டியல் அனுப்பி வைத்த நிலையில் பலர் ஏற்கனவே பணியில் இருப்பதும் சிலர் தகவலை மறைத்தமை தொடர்பிலும் மாவட்டச் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் சகல மாவட்ட செயலகங்களினாலும் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 253 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 956 பேருக்கும் , முல்லைத்தீவில் 126 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 83 பேருக்கும் மன்னாரில்  144 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 111 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 141 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 130 பேருக்கு நியமனம் வழங்ப்ப்பட்ட அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 199 பேரில் 197 பேரிற்கு நியமனம் வழங்கப்பட்டது.
இதேநேரம் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்ட பட்டதாரிகளிற்கு வடக்கு மாகாணத்திற்குள் நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா பட்டதாரிகளில் 50 பேருக்கு கொழும்பில் உள்ள திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சில பட்டதாரிகள் மத்தியில் சல சலப்பு நிலவியதோடு பயிற்சிக்கு செல்வதில் இடர்பாடு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது .
இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கொழும்பை தலமையகமாக கொண்ட திணைக்களத்திற்கு பயிற்சிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியின் பின்னர் குறித்த திணைக்களம் சார் மாகாண அலுவலகங்களின் பணிக்காக அமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்