எல்லை மீறும் சரவணன், பொறுமை இழக்கும் சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் சேரனை சரவணன் அநாகரீகமாக பேசியது அனைவரையும் அதிர வைத்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய இரண்டாவது புரமோவிலும் அவர் எல்லை மீறி பேசியுள்ளார். முதல் புரமோவில் அமைதியாக இருந்த சேரனும் பதிலுக்கு சரவணனிடம் எகிறுகிறார்

சேரன் லூசு மாதிரி பேசுவதாக சரவணன் கூறியதை சேரன் கண்டிக்கின்றார். தர்ஷனும் சேரனுக்கு ஆதரவாக பேசுகிறார். அதன்பின் கொஞ்சம் தடுமாறும் சரவணன், ‘நீ’, ‘போப்பா’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இருந்தும் சேரன், சரவணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையில் இருந்து தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சேரனை சரவணன் மரியாதைக்குறைவாக பேசியபோது தர்ஷன், மதுமிதா உள்பட ஒருசிலர் சரவணனை கண்டிக்கின்றனர். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு தர்ஷன் அறிவுரை கூறுகிறார். ஆனால் சேரனை ‘அப்பா’ ‘அப்பா’ என்று கூறும் லாஸ்லியா அமைதியாக இருப்பது முரண்பாடாக தெரிகிறது.

சரவணனின் இன்றைய நடவடிக்கையை நாளை கமல் கண்டிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருசிலர் தவிர ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் சேரனுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சேரன், சரவணன் சண்டையால் கவின், சாக்சி விஷயம் மறக்கப்பட்டது ஒரு நிம்மதியே

Vijay Television

@vijaytelevision

#Day40 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.

உட்பொதிக்கப்பட்ட வீடியோ


Recommended For You

About the Author: Editor