‘பறையடி’ இசைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இசைத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதும் அவர் ஒரு நல்ல பாடகி என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பறையடி இசையை இசைப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற, பழமையான இசைக்கருவியான பறை இசையை ஸ்ருதிஹாசன் மிக நேர்த்தியாக ஒரு நல்ல இசைக்கலைஞர் போல் இசைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த  வீடியோவிற்கு இலட்சக்கணக்கானோர் லைக்ஸ் அளித்து வரும் நிலையில் ஸ்ருதிஹாசனின் இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகர் ராணாடகுபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதியுடன் ‘லாபம்’ என்ற படத்திலும் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor