
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தலைவர் பதவிக்காக ஒரு புதிய டாஸ்க்கும் வைக்கப்படும்.
அந்த வகையில் இன்று தலைவர் பதவிக்காக போட்டியிடும் மதுமிதா, முகின் மற்றும் சாண்டி ஆகிய மூவருக்கும் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது
இந்த டாஸ்கில் 2 ஆண்களுக்கு இடையே சரிசமமாக விளையாடிய மதுமிதாவுக்கு கடைசி நேரத்தில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டது. இதனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. இதனை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அந்த ரத்தத்தைத் துடைத்து அவருக்கு முதலுதவி செய்தனர். இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் முகின் வெற்றி பெற்றது போல் புரமோ வீடியோவில் தெரிகிறது. இருப்பினும் ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கேற்ற மதுமிதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இன்று தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் அடுத்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை வழி நடத்த வேண்டும். முக்கியமாக கவின் – சாக்சி – லாஸ்லியா விஷயத்தையும், சேரன் – சரவணன் விஷயத்தையும் சமாளிக்க வேண்டிய சவால் புதிய தலைவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது