விஷாலுக்கு பிடிவாராண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் உத்தரவு ஒன்றை சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வருமான வரி செலுத்தாதது குறித்து வழக்கு ஒன்று நடிகர் விஷால் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனால் அவர் பதிலளிக்காத காரணத்தினால், விஷால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது

ஆனால் ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று விஷால் நீதிமன்றத்தில் ஆகாராகதால் அவருக்கு சென்னை பொருளாதார குற்றவழக்கு நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor