எசல பெரஹரவின் நிகழ்வு ஆரம்பம்!!

கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வான கப் நடுகை செய்யும் பாரம்பரிய நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 05.10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு சுமார் 7000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 7000 பொலிஸாரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்களெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor