ஔடதம் விமர்சனம்!

நாயகன் நேதாஜி பிரபு வக்கீலாக இருக்கிறார்.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட காலாவாதியான மூலப் பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதையறிந்த அரசு, இந்த மூலப் பொருட்களை அழிக்க சொல்லி ஆணையிடுகிறது.

ஆனால், மர்ம கும்பல் ஒன்று இந்த மூலப் பொருட்களை வைத்து மாத்திரைகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதை நண்பர் மூலமாக அறிந்துக் கொள்ளும் நேதாஜி பிரபு அதை தடுக்க நினைக்கிறார்.

இதனால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார். இறுதியில் நாயகன் நேதாஜி பிரபு, பிரச்சனைகளில் இருந்து மீண்டு, மர்ம கும்பலையும், காலாவதியான மூலப் பொருட்களையும் அழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நேதாஜி பிரபு வக்கீலாகவும், காலாவதியான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தெரிந்ததும், அதை தட்டிக்கேட்டும் துடிப்பான இளைஞராகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், பாடல்கள் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சமைரா டாக்டராக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

மெடிக்கல் கிரைம் திரில்லரில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமணி. குறைந்த பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை கொடுத்திருக்கிறார்கள்.

மெதுவாக நகரும் திரைக்கதை, பிற்பாதியில் விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள். ஒரு சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

தஷி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீரஞ்சன் ராவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.


Recommended For You

About the Author: Editor