சரித்திரம் மிக்கசூசிவன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்!

தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும்.

அந்த சமயத்தில் பூஜைகள் வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும்.

இதனாலேயே வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் எல்லாவற்றிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு மிக்கதாக காணப்படுகிறது.

ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

இந்த நிலையில் ஆடி வெள்ளியான இன்று சரித்திர புகழ் பெற்ற கொழும்பு – கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

அம்மனுக்கு நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜைகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor