ரொட்புறூக் நீர்த்தேக்கம் உடைந்து வெள்ளப்பெருக்கு!!

ரொட்புறூக் நீர்த்தேக்கத்தின் சுவர்ப் பகுதிகள் வெள்ளத்தினால் இடிந்து விழுந்ததால் நகர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கடுமையான மழை காரணமாக டார்பிஷையரில் உள்ள ரொட்புறூக் நீர்த்தேக்கத்தின் அணை சேதமடைந்து நீர் வெளியேறியது.

இதனால் நகரத்தின் 6,500 குடியிருப்பாளர்களையும்  உடனடியாக உள்ளூர் பாடசாலையில் ஒன்றுகூடுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.

நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீர் கோய்ட் நதியில் பாய்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் பொதுமக்களுக்கு உயிராபத்து இருப்பதாக சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரொட்புறூக்கிற்கு அருகிலுள்ள நகரமான சப்பல்-என்-லெ-ஃபிரித்தில் (Chapel-en-le-Frith) உள்ள சப்பல் உயர்நிலைப் பாடசாலையில் செல்லப்பிராணிகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொண்டு ஒன்றுகூடுமாறு பொலிஸார் குடியிருப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் டார்பிஷைர் மற்றும் லெஸ்ரர்ஷையரில் பெய்துவரும் கடுமையான மழையினால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை வாகனச் சாரதிகள் பாதுகாப்பற்ற வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு டார்பிஷைர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்


Recommended For You

About the Author: Editor