கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட புலி செயற்பாட்டாளர்!!

லண்டனின் பிரதான புலம்பெயர் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரான கவிராஜ் சண்முகநாதன் என்பவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில்,

இலங்கை படையினர் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி லண்டனில் போராட்டங்களை இந்த நபரே ஏற்பாடு செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்களை பார்வையிடுவதற்காக இலங்கை வந்த போது குறித்தநபர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை அரச படையினருக்கு எதிராக இவர் லண்டனில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவிலிருந்து லண்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கவிராஜ், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் எனத் தெரியவந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor