காலியில் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்

காணி பிணக்கு காரணமாக காலி- எல்பிட்டிய பகுதியில் தமிழ் குடும்பம் மீது இனந்தொியாத காடையா்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கெட்டந்தொல தோட்ட மக்கள் கண்டன போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா்.

இது தொடர்பாக தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை பிரதி மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து, உடனடியாக உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவரை அனுப்பி விசாரிப்பதாக கூறினார்.

இதன்படி உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்துக்கு வருகைத்தந்ததாகவும், அவரது வாக்குறுதி அடிப்படையில் தாங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றிருப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்