காதலில் கவுண்ட த்ரிஷா?

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தான் காதலில் விழுந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் ஐந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர், சமூகவலைத்தளங்களில் இரசிகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், இரசிகர் ஒருவர் த்ரிஷாவிடம் ‘உங்களுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் என்ன’ என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு த்ரிஷா ‘சிங்கிள் பட் டேக்கன்’ என பதிலளித்துள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதில் அவர் காதலில் விழுந்துள்ளதை உறுதிபடுத்துகிறது என இரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor