இந்த அவலத்திற்கு யார் காரணம்?

மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு வரக்கூடாது என மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச லண்டனுக்கு வரக்கூடாது என லண்டன் தமிழர்கள் போராடுகின்றனர்.

மகிந்த ராஜபக்சா திருப்பதிக்கு சாமி கும்பிட வந்தால்கூட தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச இழைத்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என ஜெனீவாவில் ஐநா முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் போராடுகின்றனர்.

ஆனால் அதே மகிந்த ராஜபக்சா கட்சிக்கு சில தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்துள்ளனர்.

அதே மகிந்த ராஜபக்சவின் மகனிடம் ஒரு அரசியல் கைதியின் குடும்பம் கையேந்தி வீடு பெற்றுள்ளது.

இனி அடுத்து அதே மகிந்தராஜபக்ச மலர்மாலை அணிவித்து சில தமிழர்களால்; வரவேற்கப்படலாம்.

போகிற போக்கைப் பார்த்தால் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஒரு சீட்டை மகிந்த ராஜபக்சா வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

கடந்த 10 வருடமாக தமக்கு சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் கேட்டு வாங்கிய தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காமையே காரணம் ஆகும்.

எனவே மகிந்த ராஜபக்சவை வரவேற்கும் தமிழர் மீது சினம் கொள்வதில் பயன் இல்லை. மாறாக அந்த அவல நிலைக்கு தமிழ் மக்களை தள்ளும் தமிழ் தலைமைகள் மீதே நாம் சினம் கொள்ள வேண்டும்.

-தோ.பாலா-


Recommended For You

About the Author: Editor