இலங்கையில் விசித்திர உயிரினம்!

நுவரெலியா அப்லேக் வீதியில் உள்ள சுற்றுலா விடுதியில் வித்தியாசமான வண்ணத்தி பூச்சி ஒன்று இன்று காலை இனங்கான பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான வண்ணத்தி பூச்சி சுற்றுலா விடுதியின் சுவர் ஒன்றில்அமர்ந்து இருப்பதை குறித்த விடுதியின் உறிமையாளர் இனங்கண்டுள்ளார்.

வண்ணத்தி பூச்சிகள் அதிகமாக பறக்கும் பிரதேசமாக நுவரெலியா பிரதேசம் இனங்காணப்பட்ட போதிலும் தற்பொழுது நுவரெலியா பிரதேசத்தில் வண்ணத்தி பூச்சிகள் குறைவடைந்த நிலையில் காணபடுவதாகவும் சிவனொளிபாதமலைபருவகாலத்தில் நுவரெலியா வனபகுதியில் இருந்தே சிவனொளிபாதமலைக்கு இலச்சகனக்கான வண்ணத்தி பூச்சிகள் பறந்து செல்வதை காண முடிந்ததாகபிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பயிர்செய்கைகளுக்கு தெழிக்கபடுகின்ற மருந்துவகைகளின் காரணமாகவே நுவரெலியா பகுதியில் வண்ணத்தி பூச்சிகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் வருகையின் போது சிறுபிள்ளைகளுக்கு வண்ணத்து பூச்சிகளை காண்பிக்க கூடியவாறு இருந்ததாக மக்கள் சுட்டிகட்டுகின்றனர்.

எனவே இன்றய தினம் இனங்காணபட்ட இந்த வண்ணத்து பூச்சியானது எஸ். பிரதீப் என்ற உரிமையாளருடயை சுற்றுலா விடுதியில் இருப்பதை அனேகமான மக்கள்பார்யிட்டு செல்லுகின்றமை குறிப்பிடதக்கது. இதன் நீளம் நான்கரை அங்குலமும் இரண்டரை அங்குலம் அகலமும் கொண்டமை குறிப்பிடதக்கது.


Recommended For You

About the Author: Editor