வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி..!

ஒரு வாட்ஸ்ஆப் கணக்கை பல டிவைஸ்களில் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலில் புதிய வசதி வர உள்ளதாக அதன் அப்டேட்கள் குறித்து டிராக் செய்து முன்கூட்டியே அறிவிக்கும் வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது.

தற்போது, ஒரே நேரத்தில் ஒரு டிவைசில் மட்டுமே ஒரு வாட்ஸ்ஆப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்நிலையில் புதிதாக வர உள்ளதாக கூறப்படும் multi-platform support வசதி மூலம் வாட்ஸ்ஆப் கணக்கு ஒன்றை பல டிவைஸ்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் கணக்கு பயன்பாட்டில் இருக்கும் செல்போனுக்கு அனுப்பபடும் verification code-ஐ பயன்படுத்தி மற்றொரு டிவைசில் அதே கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதி எப்போதும் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor