ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராகவும், சமூகநலத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் பொதுப்பணித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நுகர்பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் மதுமதி சமூகநலத் துறை செயலாளராகவும், நுகர்பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக கண்ணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதா ராமுவை குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநராகவும், சமூகநலத் துறை ஆணையராக ஆபிரகாமையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor