நிதி அமைச்சிற்குள் ஐ.எஸ் பயங்கரவாதியா!!

நாட்டின் பிரதான அமைச்சு ஒன்றில் பணியாற்றும் மொஹமட் அலி ஹசன் இன்று கைது செய்யப்படடுள்ளார்.

மல்வானையிலுள்ள அவரின் வீட்டினை பரிசோதனை செய்த போது 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பியமக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் அலி ஹசன் நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் அடுத்து நாடு பூராகவும் இராணுவத்தினர் தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை கைது செய்து வருகின்றனர்.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் இலங்கை கிளையாக தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயற்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor