மொராக்கோவில் 4,767 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மொராக்கோவில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மேற்கு ஆபிரிக்க நாடான மொராக்கோவின் அரசர் முடிசூடி 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே இவ்வாறு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 4,767 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மொராக்கோவில் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலரும் இவ்வாறு விடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்