இந்தோனேசியாவில் எண்ணெய் கசிவு – மீனவர்கள் பாதிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்திலுள்ள வடக்குக் கரையோரத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு வாரத்திற்கு முன்னர் எண்ணெய்க் கிணற்றிலிருந்த எண்ணெய் கடலுக்குள் கசிந்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் நீரில் படிந்துள்ள எண்ணெய், வலைகளிலும் அவற்றில் பிடிபடும் மீன்களிலும் ஒட்டிக்கொள்வதாகவும், இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எண்ணெய்க் கசிவு மீன்பிடித்தொழிலை மாத்திரமன்றி சுற்றுச்சூழலையும் பாதிப்படைய செய்வதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்