தன்னிலை மறந்து தள்ளாடிய இளைஞர் யுவதிகள்!!

களுத்துறை, அழுத்கம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதையில் தள்ளாடிய இளம் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகமானவர்கள் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வில் போதைப்பொருள் பாவித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆபத்தான போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 8 இளைஞர் – யுவதிகள் சிக்கியுள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதி சுற்றிவளைக்கும் போது அங்கு போதையில் தள்ளாடிய நிலையில் 30 பேர் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 19 முதல் 25 வயதுடையவர்கள் ரெரியவந்துள்ளது.

அவர்களை சோதனையிடும் போது 8 பேரிடம் மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளம் பெண்கள் அரைநிர்வாண கோலத்தில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இவ்வாறான சமூக சீர்கேடுளை ஏற்படுத்தும் வகையிலான களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் அதிகளவான இளம் யுவதிகள் பங்கேற்பதாக பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டினை இளைஞர்கள் உடனடியாக தவிர்க்க வேண்டும் எனவும், இது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor