வவுனியா மாவட்ட செயலகத்தை பிரித்து மேய்ந்த STF

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(வியாழக்கிழமை) விசேட அதிரடிப்படையினரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்றைய தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரைகாலமும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு முன்பாக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு முன்பாக இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீனும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Recommended For You

About the Author: ஈழவன்