
மரண தண்டனையை அமுல்படுத்துவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் மரண தண்டனையை இல்லாதொழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தனிநபர் பிரேரணை மூலம் குறித்த சட்டமூலத்தை காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட இன்று (வியாழக்கிழமை) காலை முன்மொழிந்துள்ளார்.
எந்தவொரு சட்டத்தின் மூலமும் மரண தண்டனையை விதிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதனை இல்லாதொழிக்க வேண்டும் என்பது இந்த சட்டமூலத்தில் வலியுத்தப்பட்டுள்ளது.
குறித்த திருத்தம் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற்றால், இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் எந்தவொரு நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அத்தகைய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபராக அவர் கருதப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.