ரஷ்ய விண்கலத்தை தாக்கிய பாரிய மின்னல்!

ரஷ்யாவின் சோயுஸ்-2.1 பி என்னும் விண்கலம் – குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் நேற்று முன்தினம் ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

அன்று வானிலை சற்றே சீரற்ற நிலையில் இருந்த போதும், விண்களத்தை விண்ணில் செலுத்தும் பணிகள் ஒத்திவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 நொடிகளில் இந்த விண்கலத்தை மின்னல் ஒன்று தாக்கியது.

இதை உறுதிசெய்த அதிகாரிகள், “விண்கலத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை, திட்டம் வெற்றிதான்” என்று தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கிய காணொளிகளும், ஔிப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுபோன்று கடந்த 1969-ல் நாசாவின் அப்பல்லோ 12 திட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட சன்னி- 5 விண்கலத்தை இருமுறை மின்னல்கள் தாக்கின. அது விண்வௌி வீரர்களை கொண்டு சென்ற விண்கலம் என்பதுடன், அது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் பெரிய பாதிப்புகள் இல்லை.

விண்கலங்களை கட்டமைக்கும் விஞ்ஞானிகள் அதில் இருக்கும் உலோகங்கள் மின்னல்களை ஈர்க்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடியே அவற்றை வடிவமைக்கின்றனர். இதனால் மின்னல்கள் விண்கலங்களில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை.


Recommended For You

About the Author: Editor