கொடுக்கல் வாங்கல் பிரச்சனை – நபரை கடத்திய மூவர் கைது.

நிதி மோசடி சம்பவம் ஒன்றை தொடா்ந்து நபா் ஒருவரை கடத்தி சென்று தடுத்துவைத்திருந்த 3 போ் பண்டாரகம கொஸ்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நிதி மோசடி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குறித்த நபர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரினால், அவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனின் சாரதியும் அடங்குகின்றார். பண்டாரகம பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகபர் தலைமறைாவகியுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்