பௌத்த அத்துமீறல்களுக்கு எதிராக யாழில் பேரணி

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: ஈழவன்