எழுக தமிழை குழப்புபவர்கள் தமிழர் நலனில் அக்கறையற்றவர்கள்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் ஒரே குரலாகவே தமிழ் மக்கள் பேரவையினால் ‘எழுக தமிழ்’ பேரணி நடாத்தப்படவுள்ளது. இந்த பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் யாரும் இதனை எதிர்க்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று  நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலே கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கான விசாரணைகள், காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்காக தமிழர் தாயக பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தலைமைகளும் அரசுக்கு முண்டு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர்களின் குரலாக ஒலிக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் ஊடாக ‘எழுக தமிழ்’ பேரணியும் மிக எழுச்சி பூர்வமாக நடத்தப்பட்டது. அந்த எழுச்சி தமிழர்களின் ஒற்றுமையையும் பலத்தையும் தென்னிலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் பல செய்திகளை செல்லியிருக்கும். அதே போல் இந்த வருடமும் ‘எழுக தமிழ்’ பேரணி நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையால் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகும். எனவே இந்த பேரணியில் வடக்கு கிழக்கு மக்கள் திரளுவார்கள் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த பேரணியை தமிழ் மக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த தரப்பும் எதிர்க்காது என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்