ரஷ்யாவில் காட்டு தீ – பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்.

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பயங்கரக்காட்டு தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் கிராஸ்னோயார்க் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.

தொடர்ந்து பரவி வரும் இந்த தீ காரணமாக 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 20 விமானங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


Recommended For You

About the Author: ஈழவன்