முத்தலாக் தடை சட்டம் அமுலுக்கு வருகிறது.

முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு ஜனாதிபதி ரா‌ம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக நேற்று (புதன்கிழமை) இரவு ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், மத்திய சட்ட அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

குறித்த ஆணையின்படி, தடையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

முத்தலாக் தடை சட்டமூலம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 25ஆம் திகதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 302 வாக்குகளும், எதிராக 78 வாக்குகளும் பதிவாகின. இதன் தொடர்ச்சியாக இந்த சட்டமூலம் கடந்த 30 ஆம் திகதி மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது.

இந்த அவையில் முத்தலாக் சட்டமூலத்திற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்