ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டும். – சுரேஸ்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழர் தரப்பு ஒரு வியூகம் வகுக்க தயாராக உள்ளனரா? அல்லது பிரிந்து நின்று, யார் யாருக்கோ, ஏதேதோ நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிக்க போகின்றனரா? அல்லது தமிழ் மக்களின் நன்மைகளை கருத்திற்கொண்டு, உரிமைகளை கருத்திற்கொண்டு ஒரு பொதுவான வியூகம் அமைத்து ஆதரவு தெரிவிக்க போகின்றனரா?

என்னைப்பொருத்தவரையில், கண்டிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒரு வியூகம் அமைத்துக்கொண்டு ஒரு தரப்பினருக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்