வீடு கோரி மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கரைச்சி பிரதேச செயயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) முதல் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மாற்றுத்திறனாளியாகிய தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

மேலும், தமது பிரதேசத்தில் வசதி படைத்தவர்களுக்கும் வெளிமாவட்டங்களில் வாழ்பவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுவதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தினார்.

அத்தோடு, இதற்கு உரிய அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor