கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் கொடூர கொலை!!

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்மா, அப்பா, சகோதரி, பாட்டி என நான்கு பேரையும் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞன் கொடூரமாக கொலை செய்துள்ளான்.

இணைய விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட மென்ஹாஸ் ஜமான், அதனூடாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த கொலைகளை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்த சந்தேக நபர், அதனை இணையம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக தகவல் பொலிஸாருக்கு கிடைத்தமையை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொரன்ரோ, மார்க்கம் பகுதியில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளமை அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் உட்பட அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor