யாழில் கலை இலக்கியப் பேரவை மாநாடு!

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பிரதேசப் பேரவை மாநாடும் உறுப்பினர் இணைவும் இடம்பெறவுள்ளது.

இம்மாநாடு வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும், தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம் தலைமையில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் மக்கள் கலை இலக்கியச் செயற்பாட்டில் இணைந்து இயங்க விரும்புகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor