தேர்தல் குறித்த பேராயரின் முடிவு!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த அறிக்கை ஒப்படைக்கப்படும் வரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்கதல் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்த்தரப்புகள் பொறுப்புக்கூற தவறியுள்ளதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த தற்கொலை குண்டு தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர். முடிந்தவரை அவர்களுக்கு ஆறுதல் கூற எப்போதும் முயற்சிக்கின்றேன்.

அவர்கள் இழப்பீடுகளை கோரவில்லை. அவர்கள் நீதியை மட்டுமே கோருகின்றனர். ஆனால் பேரழிவை ஏற்படுத்திய தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்களும், முன்கூட்டியே பெறப்பட்ட உளவுத்துறை தகவல்களை தெரிந்தே புறக்கணித்தவர்களும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.

இந்த விடயத்தில் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இதற்கு ஆளும் கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியும் பொறுப்புக் கூறவேண்டும்.

இதேவேளை பக்கச்சார்பற்ற நபர்களைக் கொண்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தெரிவுக்குழு இன்னும் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை, இந்த விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.


Recommended For You

About the Author: Editor