இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ள பாக் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்துள்ளனர். சொயிப் மலிக், பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவை திருமணம் செய்து கொண்டார்.

அதேபோன்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் கான் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில், மற்றொரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷமியா அர்ஸு என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.

ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷமியா அர்ஸு. ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.டெக் ஏரோனேடிகல்ஸ் படித்த ஷமியா ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தார். தற்போது, எமிரேட் ஏர்லைன்ஸ்-ல் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஹசன் அலி, ‘என்னுடைய திருமணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தெளிவுபடுத்துகிறேன்.

இரு வீட்டினரும் இன்னும் சந்திக்கவில்லை. விரைவில் அந்த செய்தியை அனைவரிற்கும் தெரிவிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor