உலவுவது போலி ஆவணம் – கோத்தா!!

சமூக ஊடகங்களில் அமெரிக்க குடியுரிமை இழப்பு தொடர்பான ஆவணம் தன்னுடையது அல்ல என்றும், அது போலியானது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இழப்பு சான்றிதழ் என, அவரது விசுவாசிகள் என நம்பப்படுவோரால், நேற்றுக்காலை சமூக ஊடகங்களில் உலாவ விடப்பட்டது.

அரசியல் நலனை அடையும் நோக்கில் பரவ விடப்பட்ட இந்த ஆவணம் போலியானது எனக் கண்டறியப்பட்ட நிலையிலேயே, இது தன்னுடையது அல்ல,போலியான ஆவணம் என கோத்தாபய ராஜபக்ச நேற்று மாலை கூறியுள்ளார்.

“உண்மையான அமெரிக்க குடியுரிமை இழப்பு ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் அதனை யாருக்கும் காண்பிக்க போவதில்லை.

தேர்தல் ஆணைக்குழு கோரினால் மாத்திரமே அதனை சமர்ப்பிப்பேன். ஊடகங்களுக்கு அதனை காண்பிக்க மாட்டேன்” என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor