வெளிநாட்டு குப்பைகளை எடுத்து செல்ல நீதிமன்றம் தடை !

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த குப்பைகள் அடங்கிய கொள்கலன்களை நாட்டின் வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அதிரடி உத்தரவை இன்று நீதிமன்றம் பிறப்பித்தது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், கொழும்பு துறைமுகப்பகுதியிலும் குறித்த வெளிநாட்டு குப்பைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குப்பைகள் தொடர்பில் சுற்றாடல் நீதிமன்றம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணை செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor