சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட வேலைகள்!

சர்வதேச பிரதிநிதிகளின் உதவியுடன் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி சுற்றுலாத்துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் இலங்கையில் சுற்றுலா சின்னத்தை மீண்டும் பிரபல்யப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது ஆறு மாத காலப்பகுதி முழுவதும் விளம்பர பிரசார வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு முன்னெடுக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் குறைப்பதற்கான மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இவ்வாறான விசேட வேலைத் திட்டங்களை செயற்படுத்திவருகின்றது.

இதேவேளை, குண்டுத்தாக்குதல்களை அடுத்து உலக நாடுகளால் விடுக்கப்பட்டிருந்த, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடையை தற்போது தளர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor