பொம்மைக்கு பதில் போதை மாத்திரை!!

போர்த்துக்கல் நாட்டிலிருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு வந்த பொம்மைகள் அடங்கிய பொதி ஒன்றிலிருந்து 3050 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொழும்பு 14, லெயார்ட் பிராட்வேயில் வசிக்கும் 27 வயது இளைஞர் போர்த்துக்கல்லிலிருந்து அனுப்பப்பட்டகுறித்த பொம்மைகள் அடங்கிய பெட்டியை பெற்றுக்கொள்வதற்காக 7/30 மாலை கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor