ஆடி அமாவாசை – மாவை கந்தன் தீர்த்தம்

ஆடி அமாவசையை முன்னிட்டு கீரிமலை தீர்த்த கடற்கரையில் பிதிர்கடன்களை பெருமளவானோர் செலுத்தினர்.
இந்து மத மக்களின் நம்பிக்கைப்படி சிரார்த்த தமது தந்தையின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஆடி அமாவாசை தினத்ததன்று விரதமிருந்து தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிதிர்கடன்களை செய்வார்கள்.
அந்த வகையில் கீரிமலை கடற்கரையில் பெருமளவானோர் பிதிர்கடன்களை செய்தனர்.
அதேவேளை மாவிட்ட புர கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழாவும் கீரிமலை கடலில் நடைபெற்றது.
காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மாவை கந்தன் கீரிமலை தீர்த்த கடலுக்கு எழுந்தருளி தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

Recommended For You

About the Author: ஈழவன்